ஒரு மாதம் முன்பு ஒரு இளைஞன் என்னிடம் வந்தான் வேலை கேட்டு.
படிப்பு வரவில்லையாம், பள்ளி யில் பாதியிலேயே நின்று விட்டானாம். எனவே கொல்லர் உலையில் துருத்தியை ஆட்டுவது, குயவருக்கு மண் மிதித்துக் கொடுப்பது, கீற்று முடைவது, வயல் வரப்பு அண்டை வெட்டுவது போன்ற பணிகளை செய்து வந்தானாம்.
“இப்பொழுது கிராமங்களில் கொல்லர் உலையும், பானை பண்ணுதல், கீற்று முடைதல் எல்லாமே மறைந்து விட்டன, எந்திரமே விவசாயம் செய்து விடுகிறது” என்று புலம்பினான்.
ஆள் வாட்ட சாட்டமாக, நகரங்களில் ஜிம் நடத்துபவர் போல் இருந்தான்.
‘உடல் வளமே மன நலம்’, ‘Physical Fitness is Mental Wellness’ என்று எழுதி இரண்டு அட்டைகளை எடுத்துக்கொண்டு, அவனை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றேன், காலையில்.
இரண்டு அட்டைகளையும் மணலில் குத்தி நிற்க வைத்துவிட்டு, அவனிடம் கேட்டேன்: “கிராமத்தில் நீ செய்து வந்த பணிகளை எவ்வாறு செய்தாய்? செய்து காட்டு” என்றேன்.
குனிந்து நிமிர்ந்து கைகால்களை மேலே கீழே ஆட்டி, இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி சேறு மிதிப்பது போன்று மிதித்து, கீற்று முடைவது போல் இரண்டு கை விரல்களையும் முறுக்கி எடுத்தான். அவைகளை நான் முறைப்படுத்தி, ஒன்று இரண்டு என்று பத்து வரை முறை மாற்றாமல் செய்து கொண்டே இரு என்று சொல்லிவிட்டு திரும்பி வந்து விட்டேன்.
பத்து நாட்களில் அவன் என்னிடம் வந்தான். “ஐயா, ஐம்பது இளைஞர்கள் சேர்ந்து விட்டனர் என்னிடம். ஒருவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கட்டணம். வாரம் மூன்று நாட்கள்தான் பயிற்சி. இரண்டு குழுவினர். மாத வருமானம் ரூபாய் ஒரு லட்சம்…. ரொம்ப நன்றி ஐயா….நல்லவேளை, எனக்கு பள்ளியில் படிப்பு வரவில்லை” என்றான் உற்சாகத்துடன்.
இறுதியாக அவன் சொன்னதைக் கேட்டு எனக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.
“ஐயா, கிராமத்துல என்னோட படிச்ச பையனும் என்கிட்ட வந்தான்…. இங்க பெரிய கம்பெனியில வேலையாம்….மூணு லட்சம் சம்பளமாம் மாசத்துக்கு… படிக்கும்போது முதல் மார்க் அவன்தான்….கடைசி மார்க் நான்தான்…..என்னைக் கேலி பண்ணுவான்….இப்ப நான் சொல்றதையெல்லாம் செய்றான்….தொப்பை பயங்கரம்…குனியவே முடியல அவனுக்கு…”
சூ. குழந்தைசாமி
—————-
About a month ago, a young man came to me looking for a job.
He said he had not been good at studies and had dropped out of school halfway. So he used to do manual jobs like working the bellows in a blacksmith’s furnace, preparing clay for potters, weaving thatched mats, and cutting weeds along field bunds.
He lamented, “Now in villages, blacksmith furnaces, pottery, and mat weaving have all disappeared. Machines do all the farming work.”
He was well-built and strong, like a gym trainer in the city.
One morning, I took two placards on which I had written, “Sound Body, Sound Mind” and “Physical Fitness is Mental Wellness.” I made him ride with me on a bicycle and took him to Marina Beach in Chennai.
I fixed the two placards in the sand and asked him,
“How did you do the work you used to do in the village? Show me.”
He bent and straightened up, moved his hands and legs up and down, alternated his feet as if trampling mud, and twisted his fingers as if weaving mats.
I corrected his movements, asked him to repeat them properly, and told him to keep doing them from one to ten without stopping. Then I left.
After ten days, he came back to me and said:
“Sir, fifty young people have joined me. I charge ₹1,000 per person per month. Training is only three days a week. There are two batches. My monthly income is one lakh rupees. Thank you very much, sir. Luckily, I was not good at studies!”
He said this with great excitement.
When I heard what he said at the end, I could not stop laughing.
“Sir, one of the boys who studied with me in my village came to me too. He works in a big company here. His salary is three lakh rupees per month. When we were in school, he always got the highest marks, and I got the lowest. He used to make fun of me. Now he does everything I tell him. His stomach has become huge. He can’t even bend down!”
Leave A Comment