உலகில் அமைதி வேண்டும் !
(குழந்தைகள் பாடும் அமைதிக்கான பாடல்)
உலகில் அமைதி வேண்டும்- குழந்தைகள் எமக்கு- உலகில்
எல்லைகள் தாண்டி குழந்தைகள் எமக்கு- உலகில் அமைதி வேண்டும்.
உங்கள் சண்டைகள் எமக்கு வேண்டாம்
எங்கள் பூமியை அழித்திட வேண்டாம்
மங்கல வாழ்வு மலர்ந்திட வேண்டும்
தீங்கின் வேர்களைக் களைந்திட வேண்டும்- (உலகில்)
போட்ட சண்டைகள் போதும் மக்களே
போராட்ட முறைகள் மாறிட வேண்டும்
அன்பும் கருணையும் ஆற்றலும் அறிவும்
இன்பம் செழித்திட இணைந்திட வேண்டும்- (உலகில்)
அணுஆயுத சண்டை அகிலம் அழித்திடும்
சினம் வெறி போட்டி தன்னை அழித்திடும்
காந்தியின் அகிம்சை அகிலம் காத்திடும்
சாந்தியின் வழியில் புதுவாழ்வு மலர்ந்திடும்- (உலகில்)
நீதியும் கருணையும் உறவின் வேர்கள்
சாதியும் செருக்கும் பிரிவின் கூறுகள்
உறவை வளர்த்து மன எல்லையை மாய்த்து
சிறகை விரித்துப் பறந்திடுவோம் நாங்கள்- (உலகில்)
-சூ குழந்தைசாமி
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2Fchildrens-song-for-world-peace%2F">logged in</a> to post a comment.
Leave A Comment
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2Fchildrens-song-for-world-peace%2F">logged in</a> to post a comment.