அமைதியான உலகம் வேண்டி குழந்தைகளின் பிரகடனம்.
உலகக் குழந்தைகளாகிய எங்களுக்கு அமைதியான உலகம்தான் வேண்டும்!
இந்த பூமி குழந்தைகளாகிய எங்களுடையது. இயற்கைச் செழிப்பும், எல்லா உயிரினங்களின் மகிழ்ச்சியான வாழ்வும்தான் எங்களுக்கு அமைதியைத் தரும்.
நாடுகள் பலவாயினும், பூமித் தாயின் மடியில் குழந்தைகளாகிய நாங்கள் அனைவரும் அமைதியாக ஒற்றுமையாக இணைந்து வாழ விரும்புகிறோம்.
போர் என்பது ஒரு பண்பாடு அற்ற வழிமுறை ஆகும். நாடுகளுக்கிடையே உண்டாகும் பிரச்சனைகளை, எங்களுடைய வாழ்வாதாரங்களை அழிக்காத அளவில், அமைதி வழியில் பேசி சரி செய்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.
அணு ஆயுதங்கள் அகிலத்தையே அழித்துவிடும் என்ற பயத்தால் விளையும் போர் நிறுத்தம் நிரந்தரமான அமைதியைத் தராது. மகாத்மா காந்தி கற்றுத் தந்த அகிம்சை வழி ஒன்றே நிலைத்திருக்கக் கூடிய அமைதியைப் புத்துயிர்ப்பிக்கச் செய்ய முடியும்.
கொல்வது அல்ல, கொல்லப்படும் நிலையிலும் அன்பு செலுத்துவதே வீரம் என்று அண்ணல் காந்தி எங்களுக்கு கற்றுத் தந்தார். எனவே, தியாகம் மற்றும் சகிப்புத்தன்மையுடன் கூடிய தூய எண்ணங்கள் தூய சொற்கள் தூய செயல்கள் நிரம்பிய உலகம் வேண்டும் எங்களுக்கு.
அகிம்சை வாழ்வியல் எங்கள் கல்வியில் போதிக்கப்பட வேண்டும். தியாகத்தின் வடிவங்களாக தலைவர்களும் ஆசிரியர்களும் உருமாற்றம் பெற வேண்டும்.
சுயச் சிந்தனை, சுயக் கட்டுப்பாடு, சுயச் சார்பு, சுயமாய் முடிவெடுக்கும் வல்லமையில் நாங்கள் திறன் பெறக் கற்றுத் தாருங்கள். அதற்கு உகந்தவாறு எங்கள் பாடத்திட்டங்களை மாற்றி அமையுங்கள்.
நிறம் இனம் மதம் மொழி மாநிலம் மற்றும் தேச எல்லைகளைக் கடந்து எல்லா மக்களையும் அன்பு செலுத்த நாங்கள் விரும்புகிறோம். அதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் ஒருவரை வெறுத்து ஒருவரை அன்பு செய்வது உண்மையான உறவு ஆகாது.
மொத்தத்தில் எங்களுடைய குழந்தைத்தன்மை களங்கப்படாமல் முன்னுரிமை கொடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும். அமைதி விரும்பும் நாடுகளின் மக்களையும் அவர்களை வழிநடத்தும் தலைவர்களையும் நாங்கள் நேசிக்கிறோம், மதிக்கிறோம், தலை வணங்குகிறோம். அவர்களுடைய முயற்சியுடன் இணைந்து குழந்தைகளாகிய நாங்களும் எங்களால் முடிந்த பணிகளை மேற்கொண்டால் அமைதியான உலகை விரைவில் கட்ட முடியும் என்று நம்புகிறோம்.
எனவே குழந்தைகள் நாங்கள் கீழ்க்கண்ட சிறு சிறு செயல்களைச் செய்து, பெரிய அளவில் அமைதியைக் கொண்டு வர முயலுவோம்.
அவைகளில் ஒரு சில:
1.
எல்லோருடைய நலனில்தான் என் நலன் அடங்கி இருக்கிறது. எனவே எனது ஒவ்வொரு செயலும் எல்லோருக்கும் நன்மை அளிக்குமா என்று முதலில் சிந்திப்பேன்.
2.
குறுக்கு வழிகளை விட்டுத் தூய்மையான வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பேன். அது ஒன்றுதான் மனசாட்சியுடன் கூடிய இன்பத்தையும், தியாகம் கொண்ட பிரார்த்தனையையும், ஒழுக்கம் தரும் கல்வியையும், உழைப்புடன் கூடிய செல்வத்தையும், மனிதநேயம் பெருக்கும் அறிவியலையும், நேர்மையுள்ள வர்த்தகத்தையும், கொள்கையுள்ள அரசியலையும் தர வல்லது.
3.
உரிமையை மட்டும் கேட்காமல் அதற்குரிய எனது கடமைகளை முதலில் செய்வேன். பலன் கருதாப் பணியே மக்கள் சேவை என உணருவேன்.
4.
தேர்விலும் சரி வாழ்க்கையிலும் சரி, மற்றவரைப் பார்த்து ‘போலச் செய்யாமல்’ (காப்பியடித்தல்), எனது படைப்பாற்றலின் (சத்தியம் உணர்த்தும் உள்ளொலி) வழியில் செல்வேன்.
5.
அன்பு வழியே உண்மையான சரித்திரம் படைக்கிறது. எனவே வன்முறையில் ஈடுபடுவோரையும் மனம் மாறச் செய்து அதையே சரித்திரம் ஆக்குவேன்.
6.
ஒருவர் என்னிடம் பேச வந்தால் அவரை மதித்து குறுக்கே பேசாமல் கூர்ந்து முழுமையாகக் கவனிப்பேன். எந்த வகையிலும் ஏற்றத்தாழ்வு கற்பிக்க மாட்டேன்.
7.
பேச வேண்டுமானால் அனுமதி பெற்று என் பேசும் உரிமையை அன்புடன் நிலைநாட்டுவேன். சுருக்கமாகத் தெளிவாக உறுதியுடன் பேசுவேன்.
8.
எனக்கு ஒருவர் துன்பம் இழைத்தால் அது பற்றி மூன்றாம் நபரிடம் கோள் மூட்டாமல், அகிம்சை வழியில் நேர்முகமாகப் பேசி, சிக்கலைத் தீர்த்துக்கொள்வேன். எங்கள் பிரச்சனையில் மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிர்த்து விடுவேன்.
9.
மாற்ற முடியாத இயற்கையைக் குறை கூறிப் புலம்பி எனது சக்தியை வீணடிக்க மாட்டேன். தப்பிக்க முயலாமல், அவ்வப்போது நடக்கும் இயற்கை நிகழ்வுகளை முழுமனத்துடன் ஏற்றுக் கொள்வேன்.
10.
வீண் வதந்திகளைப் பரப்பிக் குழப்பம் விளைவிக்க மாட்டேன். புரளி பேசுவோருடன் நட்புறவு கொள்ள மாட்டேன். மற்றவரின் பொருளை அனுமதி இன்றித் தொடுவதும், எடுத்துக் கொள்வதும், காலத்தைக் கடைபிடிக்காததும், மற்றவரை இழிவுபடுத்துவதும் வன்முறையின் மறு வடிவமாகும் என்பதை உணர்கிறேன்.
11.
எனது தவறுகளை நானே முன்வந்து ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டு, இனி அவ்வாறு செய்வதில்லை என்று உறுதி மேற்கொள்வேன். அதன்மூலம் காவல் நிலையங்கள் நீதிமன்றங்களின் சிரமங்களைக் குறைக்க விரும்புகிறேன்.
12.
சத்தியம், அகிம்சை, திருடாமை, உடைமை சேர்க்காமை, உழைப்பின் மூலம் உணவைப் பெறுதல், சுதேசி (பிறர் உழைப்பை மதித்தல்), தீண்டாமை உணர்வை அகற்றுதல், எல்லாவித மத நம்பிக்கைகளையும் மதித்துப் பாராட்டுதல், பிரம்மச்சரியம், என்ற மகாத்மாவின் கொள்கைகளைக் கடைப்பிடித்து அதன் மூலம் அஞ்சாமையை எனது வாழ்வியல் ஆக்கிக் கொள்வேன்.
13.
பல் துலக்குவது, குளிப்பது போன்ற அன்றாடத் தேவைகளுக்கு நீரை சிக்கனமாகச் செலவிடுவேன். நான் உணவுண்ணும் பாத்திரங்களை குவளைகளை நானே கழுவிடுவேன்.
14.
வீணாக்கப்படும் இயற்கை வளங்களான வேப்பங்கொட்டை போன்றவற்றைச் சேகரித்து முறையாகப் பயன்படுத்தும் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அளிப்பேன். கிராமக் கைத்தொழிகளுக்கு ஆதரவு அளிப்பேன்.
15.
என் உடலுக்கு ஏற்ற பருத்தி ஆடைகளையே அணிவேன். மனித உடல் உழைப்பின் மூலம் உற்பத்தியாக்கப்படும் பொருள்களையே வாங்கி உபயோகிப்பேன். என்னை வளமாக்கும் இயற்கையை நன்றியுடன் வளமாக்க முயல்வேன்.
16.
நாவின் சுவை பாராமல் உடல் நலம் கருதியே உண்பேன். உணவை வீணடிக்க மாட்டேன். உணவே மருந்து என உண்டு, முறையான உடற்பயிற்சி செய்து, உடலெனும் கருவியை உன்னதமாகப் போற்றுவேன்.
17.
இயற்கையை மாசுபடுத்தாத வாகனங்களைப் பயன்படுத்தி, எளிய பயண முறைகளை மேற்கொள்வேன். நடந்தோ, சைக்கிள் போன்ற எளிய வாகனங்களைப் பயன்படுத்தியோ பயணம் செய்வேன்.
18.
செயற்கை நுண்ணறிவு என்னுடைய இயற்கையான நுண்ணறிவை அழித்துவிடாதபடி கவனமாக செயற்கைச் செயலிகளைக் கையாளுவேன். மூளைக் கணினியின் அறிவும் இதயத்தின் கருணையும் உடலின் உழைப்பும் இணைவதே அமைதி என்று உணர்கிறேன்.
19.
சூதாட்டச் சூழலில் இருந்து விலகி நின்று, நேர்மையான உழைப்புடன் எளிய வாழ்வை மேற்கொள்வேன். உடலால் உழைப்போரின் சிரமங்களைப் பகிர்ந்து கொள்வேன்.
20.
சோம்பல் தவிர்த்து உற்சாகமாய் உண்டு உறங்கிப் படித்து ஆனந்தமாய் ஆடிப்பாடி விளையாடி, எவரையும் போட்டி காரணமாக ஒதுக்காமல் இணைந்து மகிழ்ந்து வாழ்ந்திடுவேன்.
இது எங்கள் பூமி! பூமியை வளப்படுத்தி நாளைய குழந்தைகளிடம் வழங்க வேண்டிய பொறுப்பு எங்களுக்குத்தான் உள்ளது. எனவே தயவுசெய்து போர் வேண்டாம்.
போருக்குக் காரணமான ஒப்பீடு போட்டி பொறாமை கர்வம் ஆங்காரம் ஆணவம் அடக்குமுறை பூமியின் வளங்களை சுரண்டுதல் போன்றவைகளை மனிதன் விட்டால்தான் போரைத் தவிர்க்க முடியும். இதற்கு ஒரே வழி எளிய வாழ்வும் அகிம்சை வழிமுறையும்.
இதை நமக்கு உணர்த்திய மகாத்மா காந்தியின் அறநெறிகளை குழந்தைகள் கற்றுக்கொள்ள வழிவகுப்போம். குழந்தைகள் காட்டும் வழியில் தலைவர்கள் நாடுகளை நடத்த முன்வருவார்களாக!
நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக இணைந்து அமைதியாக வாழ மட்டுமே நமக்கு உரிமை உண்டு! சண்டையிட்டு உலகை அழிக்க எவ்வித உரிமையும் இல்லை.
வாழ்க பாரதம்!
வாழ்க வையகம்!!
வாழ்க குழந்தைகள்!!!
எழுதியவர்:
சூ.குழந்தைசாமி
வெளியீடு:
காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை,
சென்னை-600018.
தொடர்புக்கு: gpfchennai@gmail.com
அன்பான வேண்டுகோள்:
இல்லங்களில், பள்ளிகளில், விளையாட்டுக் கூடங்களில், வழிபாட்டுத் தலங்களில் மற்றும் எங்கெங்கு குழந்தைகள் கூடுகிறார்களோ அங்கங்கே இந்தப் பிரகடனத்தை குழந்தைகளால் வாசிக்கச் செய்து, உலகிற்கு இதை அறிவிக்க வேண்டுகிறோம்.
நன்றி, வணக்கம்!
—————–
Dear and Respected Principal,
Greetings from Gandhi Peace Foundation, Madras.
The whole world is facing a War crisis today and this becomes a concern for every one. Since the world belongs to the children, they have a right to preserve and safeguard it by peaceful means. Obviously they can raise a voice in a non-violent way and appeal to the world leaders to resort to the Gandhian Non-violent way.
With this vision, we have prepared a document for children to declare.
Kindly let this Declaration be read in your School Assembly and let us have it recorded.
Regards.
S.Kulandaisamy
Secretary-GPF-MADRAS
——————
Children’s Declaration for Peace!
As children of the world, we want a peaceful world!
This earth belongs to us, and we believe that peace can be achieved through the prosperity of nature and the happiness of all living beings.
We, as children of the world, want to live in harmony and peace, united as one family on this earth, regardless of our nationalities. We believe that war is a barbaric method that destroys our livelihoods and future.
We urge nations to resolve conflicts peacefully, without harming our livelihoods. We ask that countries work together to find solutions to their problems through dialogue and diplomacy, rather than resorting to violence.
A ceasefire born out of fear of nuclear destruction won’t bring lasting peace. Only Mahatma Gandhi’s path of non-violence can revive enduring peace. Gandhi taught us that true courage lies not in killing, but in loving even in the face of harm. We desire a world filled with pure thoughts, words, and actions, accompanied by sacrifice and tolerance.
Our Demands
– Teach non-violent living in our education.
– Leaders and teachers should embody sacrifice.
– Develop self-awareness, self-control, self-reliance, and independent decision-making.
– Revise curriculum to reflect these values.
– Love all people, transcending boundaries.
– Create an environment that fosters love and understanding.
Our Commitment
We love, respect, and salute people and leaders who strive for peace. Together, we can build a peaceful world. We’ll undertake small actions to bring about peace, including:
– Practicing selflessness and tolerance
– Promoting non-violent conflict resolution
– Fostering global understanding and empathy
– Embracing simplicity and humility
Some of the Actions We’ll Take:
1. Think of the greater good: Before acting, I’ll consider the impact on everyone.
2. Choose pure methods:
I’ll opt for honest and transparent approaches.
3. Fulfill my duties: I’ll prioritize my responsibilities and serve humanity selflessly.
4. Be creative: I’ll think outside the box and find innovative solutions.
5. Spread love: I’ll promote love and kindness, even towards those who may have wronged me.
6. Listen actively: I’ll respect others and listen attentively.
7. Communicate effectively:
I’ll express myself clearly and respectfully.
8. Resolve conflicts peacefully: I’ll address issues directly and find peaceful solutions.
9. Accept natural challenges: I’ll face natural setbacks with courage and positivity.
10. Avoid spreading rumors:
I won’t spread false information or engage with those who do.
11. Own up to mistakes:
I’ll take responsibility for my actions, apologize, and make amends.
12. Follow Mahatma’s principles: I’ll adhere to principles of truth, non-violence, simplicity, self-restraint and self-sufficiency.
13. Conserve resources:
I’ll use water and other natural resources judiciously.
14. Support local industries:
I’ll promote and support local crafts and industries.
15. Live sustainably:
I’ll choose eco-friendly options and reduce waste.
16. Eat mindfully: I’ll prioritize health and nutrition over taste.
17. Use eco-friendly transportation: I’ll opt for simple, non-polluting modes of transport.
18. Balance technology and nature: I’ll use technology responsibly and prioritize human connection.
19. Live honestly and simply: I’ll avoid gambling and prioritize honest labour.
20. Live life fully: I’ll enjoy life’s simple pleasures and cultivate joy and positivity.
Our Earth, Our Responsibility
This is our Earth! We have a responsibility to preserve and protect it for future generations. Therefore, we urge you to avoid war and conflicts. War is often caused by comparison, competition, jealousy, pride, arrogance, domination, oppression, and exploitation of natural resources. To avoid war, humans must let go of these negative tendencies. The only way to achieve this is through simple living and non-violent methods.
Let’s Learn from
Mahatma Gandhi
We urge leaders to follow the path shown by Mahatma Gandhi and work towards creating a world where everyone can live in harmony and peace. We, the Children of this Earth, have the right to live as one family, united and peaceful. We have no right to destroy the world through conflicts.
Long Live India!
Long Live the World!
Long Live Children!
Written by:
Dr.S.Kulandaisamy
Published by:
Gandhi Peace Foundation, Madras
332, Ambujammal Street,
Alwarpet,
Chennai-600018.
Tamilnadu.
For contact: gpfchennai@gmail.com

Leave A Comment
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2Fchildrens-declaration-for-peace%2F">logged in</a> to post a comment.