மகாத்மா காந்தியுடைய 156-ஆவது பிறந்த நாள் நிறைவைச் சிறப்பிக்கும் வகையில் சென்னை காந்தி அமைதி நிறுவனம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கீழ்கண்ட பத்து தலைப்புகளில் ஒரு பேச்சுப் போட்டியை அக்டோபர் 2-ஆம் தேதி நடத்தியது.
பத்து தலைப்புகள்:
நன்மையைப் பெருக்கி தீமையை விலக்குவோம்.
அணு சக்தியைத் தவிர்த்து அக சக்தியை வீரியப்படுத்துவோம்.
நேரிய வழிகளில் மட்டும் பயணிப்போம்.
பிறர் உடைமைகளை நாடாமல் சுயக்கட்டுப்பாடு காப்போம்.
அகிலம் ஒன்றென உணர்ந்து விருப்பு வெறுப்பற்றுச் சேவை செய்வோம்.
கீழ் மேல் எவரும் இலர் என்ற சமத்துவம் படைப்போம்.
உண்ணும் உணவுக்கு உடலால் உழைக்க உறுதி எடுப்போம்.
பேச்சைக் குறைத்து ஆக்கபூர்வமான செயல்களில் அதிகம் ஈடுபடுவோம்.
இயற்கை நுண்ணறிவு கொண்டு படைப்பாற்றல் பெருக்குவோம்.
மன அழுத்தம் நீக்கும் எளிய வாழ்வியலை மேற்கொள்வோம்.
அதில் முப்பது பள்ளி கல்லூரி மாணவர்கள் 136 பேர் தங்கள் பெற்றோர் ஆசிரியருடன் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்குமே சமமாக சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள செயின்ட் ரஃபேல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் 1 மணி வரை
நடைபெற்றது.
இந்த நிகழ்வின் இறுதியில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த நிகழ்வு நடத்தப்பட்ட விதம் பற்றி பாராட்டி உரையாற்றினர்.
அவர்கள் குறிப்பிட்ட சில விடயங்கள்:
சமுதாயத்தில் சமத்துவம் வர வேண்டுமானால் போட்டி, பொறாமை, ஒருவரை ஒருவர் விலக்குதல் இல்லாத ஒரு பண்பாட்டை நாம் இளைய தலைமுறையினரிடம் உண்டாக்க வேண்டும்.
அதற்கு ஏற்றவாறு இந்தப் போட்டியில் கலந்துகொண்ட எல்லா குழந்தைகளுக்கும் பாராட்டிச் சான்றிதழ் வழங்கியது.
ரூபாய் 350 மதிப்புள்ள பரிசுப் புத்தகங்களை எல்லாக் குழந்தைகளுக்குமே வழங்கியது.
முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் என்று மூன்று பேரை மட்டும் வெற்றியாளர்களாக அறிவிக்காமல் எல்லோரையும் வெற்றியாளர்களாக அறிவித்தது.
இதன் மூலம் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையின் திறமையை வியந்து பாராட்டி மகிழும் ஒரு பண்பாடு உண்டாக்கப்பட்டது.
தனது குழந்தைக்கு மட்டும் முதல் பரிசு கிடைக்க வேண்டும் என்ற ஆவலை பெற்றோரிடம் தூண்டும் பொழுது மற்ற பெற்றோரும் குழந்தைகளும் அவர்களுக்கு எதிரியாகி விடுகிறார்கள் என்ற உண்மையை மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தில் கலந்துகொண்ட 250 பேரும் உணர வாய்ப்பளித்தது.
GANDHI JAYANTHI CELEBRATION
Mahatma Gandhi said “If we are to reach real peace in this world, and if we are to carry on a real war against war, we shall have to begin with children”.
To commemorate the 156th Birth Anniversary of Mahatma Gandhi, the Alwarpet based Gandhi Peace Foundation conducted an Oratorical Contest on Oct.2 in Santhome St. Raphael’s Girls Hr.Sec.School.
136 students from 30 schools and colleges delivered their 3 min. speeches, in Tamil, on ten topics based on Gandhian lifestyle. There were many students who spoke on more than one topic.
Each one was listened to, appreciated and awarded with a Certificate and Book prizes of Children Stories worth Rs.350. If a life of equity is to be built, ‘comparison-competition-elimination-enmity’ culture has to be erased from every mind. The event was successful in driving home this point to all ‘parents-teachers-students’ audience. Many parents spoke welcoming such positive initiatives.
Mrs.K.Revathy, H.M. of Chennai Higher Secondary School, Chennai-18 and Mr. Malli Bhaskar, Retd. College Professor gave away the Certificates and Prizes.
மொத்தத்தில் இந்த நிகழ்வு எல்லோரும் கூடி எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு, மகிழ்ந்து, உளப்பூர்வமாக உறவாடி, நட்புறவை உண்டாக்கி, காந்திய வாழ்வியலின் அவசியத்தை உணர்ந்து அதன்படி குழந்தைகளாகிய நாங்கள் எப்படி கடைப்பிடிக்க போகிறோம் என்று அறிவித்து, சமமாக உண்டு மகிழ்ந்த ஒரு ஆன்மப் பேரெழுச்சிக்கான நிகழ்வாக இது அமைந்தது.
சேற்றைப் பழிக்காமல் அதில் தாங்கள் அழகான மனமுள்ள செந்தாமரைகளாக எப்படி வளர முடியும் என்பதை குழந்தைகள் தங்கள் உள்ளத்தில் இருந்து வார்த்தைகளாக வடித்த அவர்களுடைய பேச்சுரை ஒவ்வொன்றும் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக அமைந்தது.
“நம்முடைய மென்மைத்தன்மையால் உலகையே அசைக்க முடியும்” என்ற மகாத்மா காந்தி உடைய நம்பிக்கை குழந்தைகளுடைய மனதில் ஆழமாக பதியும் வண்ணமாக இந்த நிகழ்வு அமைந்தது.
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2F156th-birth-anniversary-of-mahatma-gandhi%2F">logged in</a> to post a comment.
Leave A Comment
You must be <a href="https://gpfmadras.org/wp-login.php?redirect_to=https%3A%2F%2Fgpfmadras.org%2F156th-birth-anniversary-of-mahatma-gandhi%2F">logged in</a> to post a comment.